Friday 26 February 2010

ஒரு 'டிஷ் வாஷர்'

இப்போ கொடும் கோடை இங்கு. அநேகமான சமயங்களில் பாத்திரம் கழுவும் இடத்தில் முகத்தில் வெயில் அறைகிறது.

மகன் எத்தனையோ தடவை கேட்டு விட்டார், 'ஏன் இப்படிக் கஷ்டப்பட வேண்டும், ஒரு 'டிஷ் வாஷர்' (இது 'பாவா வாஷர்' மாதிரி இல்லை, வேறு) வாங்கலாமே!' என்று. எனக்கு பிடித்தமாக இல்லை. காரணம்... முழுவதாக இல்லாவிட்டாலும் நான் ஒரு தாவரபட்சணி. :)

'நானே சிறந்த டிஷ்வாஷர்' என்று நம்புபவள் நான். முதலில் நீர் அருந்தப் பயன்படுத்துபவை, அடுத்து பானங்கள் அருந்துவதற்கானவை, பின்னால் மரக்கறிப் பாத்திரங்கள், கடைசியாக மாமிசம் வைத்திருந்த பாத்திரங்கள், தொட்டி,  இறுதியாக தேய்க்க உபயோகித்த 'ஸ்பான்ச்'.

டிஷ் வாஷர் இந்த ஒழுங்கில் கழுவுமா!!!

டிஷ் வாஷிங் லிக்விட் வரும் போத்தல் பெரிதாக இருக்கிறது கவிழ்த்தால் தேவைக்கதிகம் ஊற்றி விடுகிறது. இது ஆரோக்கியத்துக்கும் கேடு, சேமிப்புக்கும் கேடு என்று....

இந்த ஏற்பாடு

ஒரு வெற்று ஹான்ட்வாஷ் போத்தலில் நிரப்பிவிட்டால் மூடியைத் திருக வேண்டாம். அளவுக்கு அழுத்தி எடுத்துக் கொள்ளலாம். 

கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே ஒரு விடயம் - வெயில் படும்படி வைத்தால் வீணாக வெளியேறிவிடும்.

வேலையிலும் இந்த முறையை அறிமுகப்படுத்தினேன். தோழிகள் பாராட்டினர், சிலர் பின்பற்றுகிறார்கள். சமையல் எண்ணையைக் கூட இப்படி எடுத்து வைத்து உபயோகிக்கலாம்.

உங்களுக்கும் உதவக் கூடும். பிடிக்காவிட்டால் விட்டு விடுங்கள். :)

9 comments:

  1. இமா, நானும் தன் கையே தனக்கு உதவி என்று கையாலேயே எல்லாவற்றையும் தேய்ப்பேன். டிஷ் வாஷர் இருக்கு. ஆனால் எனக்கு ஏதோ அதைக் கண்டாலே அலர்ஜி. மாசத்தில் ஒரு நாள் டிஷ் வாஷர் சுத்தமாக இருக்க வேண்டும் என்றே பாத்திரங்களை வைத்து ஆன் பண்ணி விடுவேன். பிறகு அதில் பாத்திரங்களை அடுக்கி வைத்து உபயோகிக்கும் storage போல பாவிப்பேன்.

    ReplyDelete
  2. என்னை மாதிரி ஒரு ஆள் இருக்கிறது சந்தோஷமாக இருக்கு வாணி.
    ஸ்கூல்ல இருப்பதைப் பார்த்துப் பார்த்துத்தான் எனக்கும் இந்த அலர்ஜி வந்தது. ;)

    ReplyDelete
  3. எனக்கு அப்படி அல்ஜி இல்லை. கையில் சோப்பு அலஜ்தான். ஹீ ஹீ ஹீ.


    இமா அம்மா நாங்க நியூசிலாந்து வரமலே உங்க வீட்டை நல்லா பார்க்குரோம் நன்றி இமா அம்மா.

    வீடு கிலீனா இருக்கு. வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  4. :) பிடிச்சிருக்கே இமா.. நல்ல ஐடியா.. ஆனா அதுக்கு ஒரு காலி சோப் பாட்டில் வேணுமே? :)

    ReplyDelete
  5. tkz Prabhammaa. ;)

    ~~~~~~~~~~

    எல் போர்ட்.. பீ சீரியஸ்.. ;D

    ReplyDelete
  6. கிட்டத்தட்ட ஒரு பதிமூணு வருஷமா இப்படித்தான் (சோப் லிக்விட்) பயன்படுத்துகிறேன். ரொம்ப திக்கா இருக்கறதால, பாதிக்குப் பாதி தண்ணீரும் கலந்து!! :-))

    எல் போர்ட், ஹேண்ட் வாஷ் பயன்படுத்துவதில்லையா?

    ReplyDelete
  7. /பாதிக்குப் பாதி தண்ணீரும் கலந்து// நல்ல ஐடியாவா இருக்கே. ;)

    எல் போர்ட்... ;)

    ReplyDelete
  8. இமா! நீங்களும் என்னை போலவா.. எனக்கும் நானே நானே செய்தாதான் ஒரு திருப்தி... அப்புறம் வீட்டில கல்யாணத்துக்கு முன்னாடி கொடுத்த டிரெயினிங் எல்லாம் வீணாகுமே...

    ReplyDelete
  9. இதுக்கெல்லாம் ட்ரெய்னிங் எடுத்துப் போதாது இலா. ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா