Sunday 28 February 2010

பின்தொடர்வோரே!



 புதிது புதிதாகப் பின்தொடர இணைந்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் அனைவருக்கும் இமா கையால்  ஒரு பாரிய டேலியா.


இந்த மலருக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. ;)

மருமகள், அவர் கணவரோடு ஹாமில்டன் பூங்காவிற்குச் சென்றிருந்தோம். அங்கு அன்று டேலியா மலர்க் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்றைய தினம் வானன்டைன்ஸ் தினமாகவும் இருந்ததால் வாசலில் அமர்ந்திருந்தவர் பார்வையிடச் சென்றவர்களுக்கு அவர்கள் வாலன்டைனுக்குக் கொடுக்குமாறு டெலியாக்களை விநியோகித்துக் கொண்டிருந்தார்.

அப்படி எனக்குக் கிடைத்த டேலியா இதோ உங்களுக்காக. ;)

10 comments:

  1. அடடே உங்களுக்கு கிடைத்தது எங்களுக்கா? உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுதாங்க... வாழ்த்துக்கள்.. நல்லாருங்க...

    ReplyDelete
  2. ////அப்படி எனக்குக் கிடைத்த டேலியா இதோ உங்களுக்காக. ;)///

    ரொம்ப நல்லா இருக்கு இமா அம்மா. சூப்பர்.

    ReplyDelete
  3. இது என்ன கொடுமை???
    பூவுக்கு தலை உண்டு,
    பூவைக்குத் தலை இல்லை..

    ReplyDelete
  4. Thank you soo much for the beautiful Dhalia!!

    ReplyDelete
  5. பின்தொடர்வோருக்கு மட்டும்தானா??
    அறுசுவை அனானி

    ReplyDelete
  6. இது என்ன கொடுமை???
    பூவுக்கு தலை உண்டு,
    பூவைக்குத் தலை இல்லை..

    repeated.. thanks imma.

    ReplyDelete
  7. ////இது என்ன கொடுமை???
    பூவுக்கு தலை உண்டு,
    பூவைக்குத் தலை இல்லை..////

    ஆன்ரீ..பாருங்கோ, டமில் எப்பூடி துள்ளி விளையாடுது எண்டு!! சாக்கிரதையா இருங்கோவன்..தலைய காட்டினா இங்க இருக்க ஆக்கள் தலையைக் கிள்ளி உங்கட கையில் வைத்து போட்டோ எடுக்கும் ரேஞ்சில தெரியராங்கள்.
    *****************************************************
    அப்பாடா..பத்த வைச்சாச்சி..புகையுதா இல்ல எரியுதான்னு பாப்பம்..எங்கே போனாலும் ஒரே பாசப் போராட்டமா இருக்கு..அங்கங்க அல்லாரும் குடுமி-புடி சண்ட போட்டாத்தான நம்மள மாதிரி சிங்கங்களுக்கு பொழுது போகும்?!!
    புவஹா..ஹா..ஹா!!!

    ReplyDelete
  8. இமா உங்கள் உலகம் அழகிய உலகம்..டேலியாவும் அழகு.

    ReplyDelete
  9. உங்க ஊர் பூக்களைப் பாக்கவே ஸ்பெஷலா ஒரு ட்ரிப் வரலாம் போல இருக்கு இமா..டேலியா, ரோஸ் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு.

    ReplyDelete
  10. //நல்லாருங்க...// ம்.. அண்ணாமலையான் ஆசீர்வாதம் கிடைக்கப்பெற்றது என் பாக்கியம். ;) வருகைக்கு நன்றி அண்ணாமலையான்.
    ~~~~~~~~~~

    தாங்க்யூ ப்ரபாம்மா. எப்பிடி இருக்கீங்க? நலம்தானே?
    ~~~~~~~~~~

    இதுக்கெல்லாம் நான் அதிர மாட்டேன் அதிரா. ;)
    ~~~~~~~~~~

    u r welcome Ila. Tkz 4 ur continuous support.
    ~~~~~~~~~~

    //பின்தொடர்வோருக்கு மட்டும்தானா??//
    அறுசுவை அனானி, உங்களுக்காகவும் உங்களைப் போல் நினைப்போருக்காகவும் என் அடுத்த இடுகையை அர்ப்பணித்திருக்கிறேன், போய்ப் பாருங்கோ. ;)
    ~~~~~~~~~~

    சந்தனா... //இது என்ன கொடுமை???// அதிராவின் கவிதை!!யைத் தானே சொல்றீங்க! ;)
    ~~~~~~~~~~

    பப்பி பயங்கர எச்சரிக்கை எல்லாம் விடுது. கவனமா இருக்கப் பார்க்கிறேன்பா. தாங்க்ஸ்.

    எனக்குப் புகை ஒத்துவராது ஜீனோ. இமாவின் உலகம் முற்றாக 'ஸ்மோக் ஃ ப்ரீ சோன்'.

    ஜீனோவை நான் எங்கயும் 'சிங்கிளா' காணேல்ல இன்னும். ;)
    ~~~~~~~~~~

    ஹை! ஹர்ஷினி அம்மா. வாங்கோ, வாங்கோ. ;) கைல என் அப்பாயின்ட்மன்ட் ஆர்டரோட வந்து இருக்கீங்க என்று நம்பறேன். ;)
    ~~~~~~~~~~

    மகி, இங்கயும் நிறைய மஞ்சள் பூக்கள் இருக்கு. எப்போ வரீங்க. ;) கூடவே எலியும் வரும்ல, என்னோட சமையல் டே(டெ)ஸ்ட் பண்ண. ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா