Friday 26 February 2010

'கலக்குங்க'

'எல்லோருக்கும் கப் கொடுத்து கலக்கிட்டு நம்மை மட்டும் மறந்துட்டாங்களே,' என்று சோகமாக இருக்கிற ஆட்களுக்காக இந்த இடுகை. ;)
எனக்கு காபி, டீ எல்லாம் கலக்கத் தெரியாது. தேவையானது எடுத்து வைத்திருக்கிறேன்.
'கலக்குங்க' என்று சொல்லாமல் கலக்கிக் குடிங்க. ;D
கலக்கத் தெரியலையா!! அப்போ வேற வழி இல்லை. ;( இப்படி சோகமாக உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதான்.
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சமீபத்தில் இந்த பசுவைக் கடையில் பார்த்தேன். உண்மையில் முதலில் கவனித்தது கிறிஸ்தான். என் ரசனை தெரிந்த ஆள். ;) 'வாங்கலாமா!' என்றார். வாங்கி வந்தாயிற்று. வீட்டில் வந்து ஆர்வமாக சுற்றி இருந்த கடதாசியைப் பிரித்து எல்லோருக்கும் காட்டினோம்.  மூத்தவர் இது போல் ஒன்று முன்பே கடைகளில் கவனித்திருக்கிறார். ஆனாலும் அதன் அழகைப் பாராட்டினார். சின்னவர் பார்த்து ரசித்தார். 

மருமகள் மட்டும் விபரமாக 'பசுவின் வாயிலிருந்தா பால் வரும்!?' என்றார். ;D

தயாரிப்பாளர்கள் வேறு எப்படித்தான் பாலைப் பசுவின் வயிற்றில் தங்க வைப்பதாம்! ;)
~~~~~~~~~~
பி.கு
மருமகளைக் கூட்டிக் கொண்டு ரோடோரூவா (ம்.... எனக்கே சரியா வாசிக்க முடியல, Rotorua என்று படிங்க,) ட்ரிப் போன போது தங்கி இருந்த லாட்ஜ் வாசலில் மேலே இருக்கிற மூவரும் சோகமாக உட்கார்ந்திருந்தார்கள், க்ளிக்கி விட்டேன். 

10 comments:

  1. நல்லா அழகா இருக்கு....

    ReplyDelete
  2. கலக்குவேன் கலக்குவேன்..
    கட்டங்கட்டி கலக்குவேன்..
    திட்டந்தீட்டி கலக்குவேன்.. பாரு..

    இமா.. பயந்திராதீங்கோ.. சிம்பு பாட்டாக்கும் இது..

    வேறாரையுங் காணோம்.. ரீ, பிஸ்கெட்டு எல்லாத்தையும் சுருட்டிட்டு.. டொண்டொடைன்.. எஸ்கேப்..

    ReplyDelete
  3. உங்களுக்காகத்தான் ஸ்பெஷலா இந்த இடுகை போட்டேன். வெந்நீர் ஆற முன்னம் வந்து கலக்கிட்டீங்க அண்ணாமலையான். ;D

    ReplyDelete
  4. No use L's. ;)
    vara vendiyavanga vanthu eduththuttup poytaanga. ;D

    ReplyDelete
  5. Ah ... I have seen one of this milky here too ... Now I am tempted.

    ReplyDelete
  6. கலந்து குடிச்சாச்சு இமா

    ReplyDelete
  7. இமா, நான் டீ குடிப்பது குறைவு. உங்களுக்காக ஒரு டீ( பால் முழுவதும் எனக்குத் தான்) குடிக்கிறேன். அது Dilmah டீ bag????( தெரிந்து கொள்ளாவிட்டால் என் மண்டையே வெடித்து விடும்).

    ReplyDelete
  8. வாங்கிருங்க இலா. ;)

    ~~~~~~~~~~

    சாரு... நீங்க காபியா டீயா!

    ~~~~~~~~~~

    அது டில்மாவேதான் வாணி. ;)

    ReplyDelete
  9. Well done!!!...கலக்கிட்டீங்க!! நான் ரீயைச் சொன்னேன்!!!

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா