Saturday 27 February 2010

அதிராத அன்னம்!?

 
அதிராமல் அதிரா முன்னே போய் வழிமறித்த அந்த அன்னம் இதில் யாராக இருக்கும்!!
~~~~~~~~
Rotorua City Lakefront முன்னால்

21 comments:

  1. இம்ஸ்.. க்யூட் (அன்னத்தைச் சொன்னேன் :) )

    உங்க காலரிப் பூக்கள் கொள்ளை அழகு இமா :)

    ReplyDelete
  2. நல்ல போட்டா, கமெண்ட்

    ReplyDelete
  3. 'தாரா' மாதிரியே கதைக்கப் பழகுகிறீங்கள் சந்தனா. ;)

    இது சீசனில்லாத சீசன். கனக்கப் பூக்கள் இருக்கேல்ல. அண்டைக்கு மழை வேற. இருந்ததையும் வடிவாக எடுக்க முடியேல்ல. பிறகு பழைய படங்கள் ஏதாவது இருக்குதோ எண்டு பார்த்துச் சேர்க்கிறன்.
    ~~~~~~~~~~

    நானும் பார்க்கிறேன், எப்பவும் சட்டென்று ஓடி வந்து 'சுருக்க விடை தருக' கேள்விக்குப் பதிலளிக்கிற மாதிரி சுருக்கமா ஒரு பின்னூட்டம் போட்டுட்டு ஓடிருறது. ;)

    இப்பிடி சொல்லீட்டேன் என்று இந்தப் பக்கம் வராம விட்டுராதீங்க அண்ணாமலையான், எப்பவும் போல தொடர்ந்து வந்து போய்ட்டு இருங்க. ;)

    ReplyDelete
  4. கருப்பு அன்னம்? முதல் முறை பார்க்கிறேன்!!

    பக்கத்தில் நிற்கும் இரு-கால் சிவப்புக் குதிரை-யார்?? ;-))

    ReplyDelete
  5. 1. அது அவுஸ்திரேலியப் பறவை. இங்கும் அங்கங்கே காணலாம். கண்டதும் அதிரா நினைவு வந்தது. பார்த்துக் கொண்டே இருந்தேன். வீடு திரும்பியபின் பார்த்தால் இந்தப் படம் இருக்கிறது.

    2. குதிரை!!! ;)

    ReplyDelete
  6. இமா, சிவப்பு அலகுடன் உங்களை லுக் விடுவது தான் "தேம்ஸ் அதிரா". மற்றது சந்துவா?? அல்லது ஜீனோவா?? தெரியவில்லை. உங்களை கண்டு கொள்ளாமல் போவதால் யாராக இருக்கும்?????

    ReplyDelete
  7. அன்னங்கள் படம் ரொம்ப சூப்பர்!!! பிளான் பண்ணி மேட்சிங் டிரெஸ் போட்டீங்களா ??!!! எனக்கும் வாத்து/அன்னம்/பிளாமிங்கோ எல்லாம் ரொம்ப பிடிக்கும் :))

    ReplyDelete
  8. ஆகா... என்ர வெள்ளை அன்னத்தைப் பிடிச்சு கறுப்புப் பெயிண்ட் அடிச்சிட்டினமோ(பெயிண்ட் அடிப்பதில் வல்லுனர்கள்) என எனக்கு கையும் ஓடலே.. காலும் ஓடலே... அதுதானே பார்த்தேன்... இது அன்னமில்ல அன்னமில்ல.. அவுஸ்திரேலியப் பறவை...

    அன்னமாவது நியூசிலாந்து போறதாவது... பொலீஸ் துரத்தும்போது என்னிடம் கண்ணாலே பேசிக்கொண்டேதான் போனது..”உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன்” என்று... அழுகை அழுகையா வருது... அதை நினைக்க இமா டிஷ்யூ பிளீஸ்ஸ்... ஒன்று போதாது... இன்று கொஞ்சம் பீலிங்ஸ் அதிகம்..

    யாராவது.. வானதியை (காலெடுத்த வனி) ஒருக்கால் பிடிச்சுத் தாறீங்களோ? மறக்க நினைக்கிறேன்... நியா:)பகப்படுத்திவிட்டார்.... தேம்ஸ்சைத்தேன்ன்ன்ன்.

    இல்லை வாணி.. ஜீனோ, ஆன்ரியின் காண்ட் பாக்கில் இருக்கிறார்... பத்திரமாக... அன்னம் என்றால் அவருக்கு பயம்ம்ம்ம்ஆஆஆம்....

    ரொம்ப தேங்ஸ் இலா... எதுக்கோ.. தாராவைப் பிடிக்குமெனச் சொல்லி என்னை புல்லரிக்கவச்சிட்டீங்கள்..

    இம்ஸ்.. க்யூட் (அன்னத்தைச் சொன்னேன் :)

    ReplyDelete
  9. அப்பிடியெல்லாம் நான் பழகல்லே இமா.. சும்மா வாயில மன்னிக்க கையில் வந்தத ”ரைப்” பண்ணினேன்.. :))

    ReplyDelete
  10. இலா... என்ன வெக்கம் விட்டுப் போச்சா!! ;)

    ம்..ஹூம். அது ஒரு தற்செயல்.
    டிரஸ்!!! நல்லாப் பாருங்க, நான் மட்டும்தான் போட்டு இருக்கேன். ;)

    எனக்கும் வாத்து (தாரா) /அன்னம் / பிளாமிங்கோ எல்லாம் பிடிக்கும் இலா.

    ஃப்ளேமிங்கோ முதல் முதல் பார்த்தது இன்னமும் பசுமையாக நினைவு இருக்கிறது. ஐந்து வயதாக இருக்கும் போது வெசாக் பார்க்கப் போனோம். தெருவில் காட்சிக்கு ஒரு ஜோடிப் பறவைகள் வைத்திருந்தார்கள். செபா அம்மா 'இதை வடிவாப் பாருங்க. அதன் சொண்டைக் கவனியுங்க. நாளை ஒரு கதை சொல்வேன்,' என்றார். மறுநாட்காலை பாடசாலை போகும் வழியில் சக்திமுற்றப்புலவர் கதை சொல்லி, 'நாராய், நாராய், செங்கால் நாராய்' பாடலும் அதற்கான விளக்கமும் சொல்லிக் கொடுத்தார். இன்றுவரை பனங்கிழங்கோ நாரைகளோ எப்போது கண்ணில் பட்டாலும் அதெல்லாம் நினைவு வருகிறது. இப்போது உங்கள் பின்னூட்டம் கண்ணில் பட்டதும் மீண்டும் நினைவு வந்தது. ;) நன்றி இலா.

    ReplyDelete
  11. வாணி, நிச்சயம் பப்பி என்னைக் கண்டும் காணாமல் போகாது. சந்தனாவும் அப்பிடிப் பண்ண மாட்டாங்க. அது 'டொக்டர்' எண்டு நினைக்கிறன். ;) அவருக்குத் தான் என்னைத் தெரியாது.
    ~~~~~~~~~~

    அதிரா, உங்களுக்கு ஃபீல் பண்ண 24 மணி நேரம் போதுமாக இருக்கிறதோ!

    'க்யூட்' சொன்னதுக்கு தாங்க்ஸ். ;)

    நேற்று நானும் ஒரு தாராவைக் கண்டு, அதனோடு கதைக்கலாமே எனக் கிட்டப் போனேன். 'ஹாய்!' சொல்லுறதுக்குள்ள பயந்து பறந்திட்டுது.;D
    ~~~~~~~~~~

    //who is thara?// சும்மா கேக்காதிங்கோ. உண்மையாகவே தெரியவில்லையா சந்தனா!!! ;) 'என் பக்கம்' திரும்பப் போய் 'பாட்டி கதை' கடைசி பார்ட் படிச்சுட்டு வாங்கோ.

    ReplyDelete
  12. அதிரா, இமாவின் தோளில் இருக்கும் அந்த hand bagஇன் உள்ளே ஆஆ ஜீனோ?? இல்லாவிட்டால் வேறு ஏதாவது சாக்குப் பை/கோணிப் பையிலா??

    ReplyDelete
  13. /அதிரா, இமாவின் தோளில் இருக்கும் அந்த hand bagஇன் உள்ளே ஆஆ ஜீனோ?? இல்லாவிட்டால் வேறு ஏதாவது சாக்குப் பை/கோணிப் பையிலா??/ Grrr....vav...vvvv!!!

    வாணியக்கா..ஒருக்கா கதவைத் திறந்து பாருங்கோவன்..ஜீனோ இஸ் வெயிட்டிங்..ஸ்னோ கலர்லேயே ஜீனோவும் இருக்கரதாலை :) உங்கள்க்கு கண்ணு தெரில.

    நீங்க ஜீனோவ ஓவராக கிண்டலடிப்பதால்,ஜீனோ இஸ் பனிஷிங் யூ...உங்கட வீட்டுக்கு வந்து உளுந்து மா களி தின்பது எண்டு ஜீனோ முடிவு செய்து, கண்ணிமைக்கும் நேரத்திலை வந்துசேர்ந்திருக்கிறார்.

    கருப்பே அழகு,காந்தலே ருசி அதிராக்கா..பீலிங்க்ஸ் எல்லாம் வாணாம். டேக் இட் ஈஸி!

    ReplyDelete
  14. அது 'டொக்டர்' எண்டு நினைக்கிறன். ;) அவருக்குத் தான் என்னைத் தெரியாது/// அவர் தெரியாதாக்களெண்டாலும் ஒரு ஹலோ சொல்லாமல் போகமாட்டார். சோ இது அவரில்லை. இது சைட்டில பார்க்க எனக்கு “இவரைப்” பார்த்தமாதிரியேதான் இருக்கு.... உற்றுப்பாருங்கோ... வடிவாத் தெரியுதெல்லோ.. எனக்கேன் ஊர்வம்ஸ்!!!!

    வாணி கன்போமா காண்ட் பாக்கில்தான்... அரைப் பவுண்ட் எடையும் அரை அடி 3 அங்குல உயரமுமான ஜீனோவை(கவனிக்கவும்... நான் சொல்லவில்லை, ஜீனோ சொல்லித்தான் எனக்குத் தெரியும்) கோணிப்பையில் எப்பூடி வைப்பது?

    கருப்பே அழகு,காந்தலே ருசி அதிராக்கா..பீலிங்க்ஸ் எல்லாம் வாணாம். டேக் இட் ஈஸி!/// எங்கேயோ இடிக்குதே ஜீனோ... எனக்கு பீலிங்ஸ்ஸால, ஒரு நாளில எத்தனை மணி இருக்கு என்பதே தெரியேல்லையே...

    ReplyDelete
  15. அழகா இருக்காங்க ப்ளாக் பியூட்டி'ஸ் ரெண்டு பேரும்!

    ப்ளாக்ல போடறதுக்காகவே இப்படி பேக் போஸ் போட்டோவா எடுக்கறீங்களோ? உங்க பேமிலி ஆல்பமும் பாத்தேன்..எல்லார் முதுகும் அழகா இருக்கு இமா!!

    ReplyDelete
  16. வாணி, பப்பி எனக்குத் தெரியாமல் ஏறி உள்ளே இருக்கிறார் மாதிரித்தான் தெரியுது, இப்ப என் ஹான்ட்பாக்கைப் பார்க்க.

    ~~~~~~~~~~

    //உளுந்து மா களி தின்பது எண்டு ஜீனோ முடிவு செய்து// ஜீனோவுக்கு என்ன ஆச்சு!!!! ஒண்ணுமே புரியல!!!! ஜீனோ பையன், அதுவும் கலியாணமான பையன் என்று நினைச்சுக்கொண்டு இருக்க இப்பிடிச் சொல்லுறீங்களே மருமகனே!!!!!!! தலை சுத்துது. ;D x 25

    ~~~~~~~~~~

    //அவர் தெரியாதாக்களெண்டாலும் ஒரு ஹலோ சொல்லாமல் போகமாட்டார்.// திருமதி அப்பிடியா!! ஓட்டமா ஓடிருவா. ;)

    //கன்போமா காண்ட் பாக்கில்தான்// ம்ம்ம். ;)

    ~~~~~~~~~~

    மகீ.. அது என்னன்னா... முன்னொரு காலத்தில் என் ஃப்ரென்ட் ஒருத்தர்ட்ட ஐடியா கேட்டேன், தளங்கள்ள போட்டோ போடுறதைப் பற்றி. 'திருமதி. அழகப்பன்' ஐடியா அவங்க கொடுத்தது. ;D நல்ல யோசனையா இருக்கே என்று பிடிச்சுக் கொண்டேன்.

    //பேக் போஸ் போட்டோவா எடுக்கறீங்களோ?// எனக்கும் உங்களை மாதிரியே முன்னாலதான் கை இருக்கு. ;)

    //எல்லார் முதுகும் அழகா இருக்கு இமா!!// நன்றி, நன்றி, மிக்க நன்றி. ;D

    ReplyDelete
  17. ஆன்ரீ..இதென்ன சோதனை? களி பாய்ஸ் சாப்டக் கூடாதா?!!?

    வானதி அக்கா வீட்டிலே ரெண்டு பாய்ஸ் இருக்காங்கள் தானே..அவங்கள்க்கும் புடிக்கும்..ஹெல்தி கூடோ எண்டெல்லாம் சொல்லி ஜீனோவிடம் உளுந்து களியை சேல்ஸ் செய்துட்டாங்கள் ஆன்ரி! இங்க பாருங்கோவன்..

    ********
    /குறிப்பு:
    இந்த ரெசிப்பி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் விருப்பமான ஒன்று. பிள்ளைகளுக்கு பட்டர் சேர்த்து செய்வேன். நானே உளுந்து வறுத்து, அரைத்து, மாவாக்கியே களி செய்வேன். மிகவும் சத்தானதும், செய்வதற்கு ஈஸியானதும் ஆகும்./ ****
    எண்டு பாத்தாலே அல்லோ ஜீனோ அங்கனம் சொல்லியவர்..இப்பூடி ஜீனோ வயத்திலை புளியைக் கரைச்சால் எப்பூ...ஊ..ஊ...டி??!!!

    ReplyDelete
  18. ஜீனோ குழம்பிட்டார். ;D

    ReplyDelete
  19. இமா, இதற்கான பதில் என் ப்ளாக்கில்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா