Tuesday 23 February 2010

நன்றி மருமகளே!


மருமகள் விடுமுறைக்காக கணவருடன் வந்து இரண்டு வாரங்கள் என்னோடு தங்கி இருந்தார். இங்கு வந்த பின், கடந்த பத்து வருட காலத்தில் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கிய முதல் உறவினர் இவர்கள்தான். காலையில் பாடசாலை, மாலையில் ஊர் சுற்றல் என்று மகிழ்ச்சியாக இரண்டு வாரங்கள் கழிந்தன.

நடுவே ஓர் நாள் எங்களிடம் இருக்கும் தேநீர்க் கிண்ணங்களைப் போல் தன் மருமக்களுக்கும் கிடைத்தால் வாங்கிப் போகலாம் என்று விசாரித்தார்.

எங்கள் வீட்டில் எம் நால்வருக்கும் பெயர் பொறித்த கிண்ணங்கள் உள்ளன.

முதன் முதலில் என் சகோதரர் என் கணவர் பெயரோடு ஒரு கிண்ணம் 'காரமண்டல்' (இங்கு) சென்ற போது கண்டதாக வாங்கி வந்தார். தமிழ்ப் பெயரெல்லாம் கோப்பையில் எங்கே கிடைக்கப் போகிறது. நான் மீதிப் பேருக்கு என் கையால் பெயரும் படமும் வரைந்து கொடுத்தேன். (அதெல்லாம் படம் பிடித்து வைக்கவில்லை.) அவற்றில் ஒன்று மட்டும் உடையாமல் மீதியாக இடுக்கிறது. இங்குதான் எங்காவது படம் இருக்கும். நீங்களே தேடிக் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள். ;)

இப்போது வீட்டில் பயன்பாட்டில் உள்ளவை அனைத்தும் வெண்மை நிற மையால் ஆங்கிலத்தில் பெயர் பொறித்த சிவப்புக் கிண்ணங்கள்.
ஒருமுறை 'கான்டினென்டல் சூப்' கம்பெனியார் ஒரு குறிப்பிட்ட கடைத்தொகுதியில் ஐந்து சூப் பாக்கட்டுகள் வாங்கிக் கொண்டு இணையத்தில் போய்ப் பெயர் பதிவு செய்தால் இலவசமாக நாம் விரும்பும் பெயர் பொறித்த கிண்ணம் (mug) அனுப்புவதாக விளம்பரம் செய்திருந்தார்கள். அப்படி வந்தவைதான் அவை அனைத்தும்.

மருமகள் குறிப்பிட்ட பெயர்கள் கடையில் கிடைக்கக் கூடிய பெயர்களாகத் தெரியவில்லை. எனவே நானே இரண்டு கிண்ணங்களை வாங்கிப் பூக்கள் வரைந்து பெயர் பொறித்துக் கொடுத்தேன்.

 மருமகள் இருந்த நாட்களில் தகரத்தில் அடைக்கப்பட்ட நிலக்கடலை வீட்டில் புழக்கத்தில் இருந்தது. அந்தப் பிளாஸ்டிக் மூடிகளை தேவையான போது நான் கிண்ணங்களை மூடி வைக்கப் பயன்படுத்துவது உண்டு.கிண்ணங்களின் உள்ளே சாக்லேட். ;)
இங்கு என் பெயர் உள்ள இடங்களில் எல்லாம் குழந்தைகளின் பெயர்கள் இருந்தன.யோசனைக்கு நன்றி மருமகளே. :)

12 comments:

 1. இமா அம்மா சூப்பரா இருக்கு இந்த கப்பும், அவங்கலுடைய ஜடியாவும். நீங்களே வரஞ்சிங்கலா? அருமையா இருக்கு இமா அம்மா. சூப்பர் வாழ்த்துக்கள் அம்மா.

  ReplyDelete
 2. இமா அம்மா ரொம்ப சூப்பர் ஆக இருக்கு சோ எனக்கு 3 கப் பார்சல் ப்ளீஸ் :)
  அறுசுவை அனானி

  ReplyDelete
 3. ம்ம்..ம்ம்...கர்....ர்ர்ர்ர்....நீ எப்பூடி தல கீழா நின்னு படிச்சாலும் அது '"ளே" தான் ஜீனோ.."னே"இல்ல..இல்ல..இல்ல!! கூல்டவுன்..காம்டவுன்..டவுன்..டவுன்..வுன்..ன்..ன்..ன்!

  ஆன்ட்டி..ரெட் கப் இஸ் ரியலி க்யூட்! ப்ளூ இஸ் ஆல்ஸோ ப்ரெட்டி!

  ReplyDelete
 4. //அண்ணாமலையான் said...

  கலக்குங்க....
  //
  ஓ...இதான் மேட்டரா....அல்லார் கிட்டவும் நீங்க இத்தே தான் சொல்றீங்களா அண்ணாத்த? Grrrrrrr.....


  ஜீனோ இன்னாமோ நெனைச்சிகினு..ஊட்டுல ஸ்டாக் வேற இல்லயே, ---- கடைக்குப் போகோணும் அண்ணாத்த சாக்குலன்னு ஆகாசக் கோட்டை கட்டிக்கினு கீது.

  ReplyDelete
 5. இமா, மிகவும் அழகாக இருக்கு. ஜீனோக்கு ரெட் கப்(போனால் போகுது என்று விட்டுக் கொடுக்கிறேன்). எனக்கு blue கப்(முதலாவதாக இருப்பது).

  ReplyDelete
 6. //ஜீனோக்கு ரெட் கப்(போனால் போகுது என்று விட்டுக் கொடுக்கிறேன்).// கர்ர்...ர்ர்ர்ர்....ர்ர்ர்..ஜீனோ கோவமா இருக்கு வானதியக்கா..வவ்-னு கடிச்சிரும் இப்ப!!!

  ஆல்ரெடி "னே" இல்லையேன்னு ஜீனோக்கு வருத்தம்..அதற்கு கப் மேல் இல்லை விருப்பம்..நீங்களே எல்லா கப்பையும் எடுத்துக்கொள்ளுங்கோ..என்சொய் செய்யுங்கோவன்!

  NB:ஜீனோக்கு கப் வேணும்னா கூச்சப்படாம எடுத்துக்கும்..ஆருக்கும் விட்டுக் கொடுக்காது.

  ReplyDelete
 7. நன்றி ப்ரபாம்மா.

  ~~~~~~~~~~

  நிஜமாவே கலக்கிருவேன் அண்ணாமலையான். பொறுத்திருந்து பாருங்கோ. ;)

  ~~~~~~~~~~

  அறுசுவை அனானிக்கு மூன்று கப் வேணுமா!!!! (ம்.... யாரா இருக்கும்.... !!! இது வேற அனானியோ!!! :)))))))
  மூணு பேர் பெயரும் சொல்லுங்க, பெய்ன்ட் பண்ணி அனுப்புறேன். ;)

  ~~~~~~~~~~

  மருமகனே, அனுப்ப விலாசம் தெரிஞ்சா நீங்க கேக்காமலே ஒரு பவுல் 'Geno' பெயர் பொறிச்சு அனுப்பி வைப்பேனே!

  ~~~~~~~~~~

  ப்ளூ கப் வானதிக்கு. :)
  ஜீனோ பற்றி யோசிக்காதைங்கோ. அதுக்கு மூக்கு கப்பில நுழையாது. பவுல்தான் சரி. ;)

  ReplyDelete
 8. இமா.. ஒரு கப் ல நாலு பூ.. இன்னொரு கப்ல அஞ்சு பூ. அதான். வானதியும் ஜீனோ வும் அடிச்சுக்கறாங்க.. நான் ரொம்ப நல்ல பொண்ணு இமா.. ஹி ஹி.. ரெண்டுமே கொடுத்திடுங்க..

  ReplyDelete
 9. அதுக்கென்ன, கொடுத்தாப் போச்சு. ;)

  ReplyDelete
 10. இமா!!சூப்பராக பெயிண்ட் பண்ணியிருக்கிறீங்க அதிராவைப்போல:) கர்ர்ர்ர்ர்ர் முறைக்கப்படாது...

  நீங்க வெறும் கப்பைக் கலக்காமல் ஓவல்ரின்னும் மைலோவும் போட்டுக் கலக்குங்கோ... அதுசரி இதுக்கு என்ன பெயிண்ட் வாங்கோணும்... ஆசை வந்திடுச்சி சொல்லுங்கோ.. செய்து படம் போடுறேன்.

  இந்த ஜீனோ மட்டும் எப்பூடி கண்ணை மூடிட்டும் புகுந்து விளை:) யாடுறார்... ஆங் கரெக்ட் ~ள~ போட்டுட்டேன்...

  வானதி, பிரபா, சந்து, ஜீனோவைப் பார்க்க ப்+ர்+ஆண்மையா வருகுதெனக்கு.... கப் வாங்கிட்டினமே... அதெப்படி இங்கு வராத டோராக்கும் ஒன்று கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

  ReplyDelete
 11. Check dis link Athira. http://www.arusuvai.com/tamil/node/14201

  I'v used paints specially made for 'glass & ceramic'

  Good luck.

  //அதெப்படி இங்கு வராத டோராக்கும் ஒன்று// That's because... she is my favourite marumakan's spouse. ;D

  ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா