Monday 5 July 2010

குட்டிப் பையனும் பென்சில் ஹோல்டரும்


இவை பாடசாலையில் என் மாணவர்கள் செய்தவற்றில் சில.

பிரதி செவ்வாயும் இரண்டு பாடவேளைகள் தொடர்ந்து 'ஸ்போர்ட்ஸ்' இருக்கும். அதில் ஓர் பாடம் மட்டும் க்ராஃப்ட் கற்றுக் கொள்ளவென்று சிலர் வருவார்கள்.

இந்தக் கைவேலை பார்ப்பதற்குச் சுலபமாகத் தெரிந்தாலும் குழந்தைகள் வெகுவாகக் கஷ்டப்பட்டார்கள்.
சில குச்சிகள் மெதுவே வளைந்து இருந்தன. சிலர் தாராளமாக க்ளூ பூசிவிட்டு 'வழுக்குகிறதே மிஸ்' என்றார்கள். ;) சமயங்களில் விரலில் ஒட்டிக் கொள்ளும் மீதமான பசையோடு குச்சியும் எதிர்பாராமல் தொற்றிக் கொண்டு வந்தது.

ஒரு போட்டி இருந்தால் அரட்டையைக் குறைக்கலாம் என்று எண்ணி 'மணி அடிக்கிற சமயம் உயரமாகவும் சீராகவும் முடிக்கப்பட்டு இருக்கும் கைவேலைக்கு ஒரு சாக்லட் பரிசு' என்று அறிவித்தேன்.

அதைப் பற்றிக் கவலைப் படாமல் பூஸையும் பப்பியையும் போல் 'கிக் கிக்' 'வவ் வவ்' என்று இருவர் அரட்டைதான் வகுப்பே என்று இருந்தார்கள். இரண்டு வரிகளுக்கு மேல் தாண்டவில்லை இவர்கள். 'இதை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?' என்றதும் தயங்காமல் 'செடி வைப்போம்,' என்றார்கள். ;)
சிலர் அரட்டையும் வேலையும் என்று கலந்து நடத்திக் கொண்டு இருந்தார்கள். எல்லோருடய வேலைகளும் ஓரளவு நன்றாகவே வந்து இருந்தது.
ஒரு மாணவி மிகவும் நேர்த்தியாகச் செய்து முடித்தார். எல்லோருமே ஏகமனதாக அவருக்குத் தான் சாக்லட் என்று விட்டுக் கொடுத்துவிட்டார்கள்.
 ஒருவர் மட்டும் நான் செய்தது சரியில்லை என்பதாக 'நோ, நோ, நோ,' என்று தலையை ஆட்டிக் கொண்டு என்னைச் சுற்றி வந்தார். சிரித்துக் கொண்டே 'Do you have any more chocolates?' என்று என் கைப்பையை எட்டிப் பார்த்தார். முன்பே எச்சரித்திருக்கிறேன், 'என் கைப்பை என் உடமை. அதைத் தொட யாருக்கும் உரிமை இல்லை,' என்று. ;) உணவுக்கு முன்செபம் சொல்லி வகுப்பைச் சுத்தம் செய்து விட்டு எல்லோரும் சாப்பிடக் கிளம்பிய பின்னரும் குட்டியர் குட்டிச் சிரிப்போடு நின்றார்.
அவருக்கு என்று தனியாக ஒரு சாக்லேட் முன்பே எடுத்து வைத்திருந்தேன்.செய்திருந்த வேலைக்கு நிச்சயம் கொடுக்கத்தான் வேண்டும்.
~~~~~~~~~~~
பின்னிணைப்பு
வகுப்பின் போது என் குட்டி மாணவர் தன் உலகில் இருந்தார். தனித்து, தனக்குத் தானே 'ஸ்பஞ் பாப்' போலப் பேசிக் கொண்டு இருப்பது போல் தோன்றினாலும் வேலையில் மும்முரமாக இருந்தார். இவர்தான் அதிகம் முறைகள் என்னிடம் வந்து 'குச்சி தீர்ந்து விட்டது,' 'சொத்திக் குச்சி எல்லாம் தந்து இருக்கிறீர்கள்,' 'இது கலர் நன்றாக இல்லை,' 'இன்னும் கொஞ்சம் க்ளூ தருகிறீர்களா,' என்று நின்றவர். நடுவே தன் வேலையை மற்றவர்கள் வேலையையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தவறவில்லை.
இறுதியில் மிக உயரமாக இருந்ததும் இவரது பென்சில் ஹோல்டர்தான். இங்கு படத்தில் இல்லை. அவர் அதைப் பிரிய விரும்பவில்லை. எனக்குப் படம் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை. ;) அழகாக இருந்தது. நேராக இல்லாமல் சிறிது சரிவாக அமைந்திருந்தாலும் அதிலும் ஓர் நேர்த்தி இருந்தது. பார்த்த ஆசியர்கள் அப்படிச் சரிவாக அமைப்பது நேராக அமைப்பதை விடக் கஷ்டமான விடயம் என்று கருத்துச் சொன்னார்கள்.
அதிபரும் வந்து பார்த்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து விட்டுச் சென்றார். பாடசாலை முடிந்து வெளியேறும் சமயம் பத்திரமாக அந்தப் பென்சில் ஹோல்டரை ஓர் பையில் போட்டுக் கொண்டு பெருமையாக ஓர் நடை நடந்து போனார், அது இன்னும் என் கண்களில் நிற்கிறது.

இந்த மாணவர் பற்றி அடுத்ததற்கு அடுத்த பதிவில்...

23 comments:

  1. அதைப் பற்றிக் கவலைப் படாமல் பூஸையும் பப்பியையும் போல் 'கிக் கிக்' 'வவ் வவ்' என்று/// karrrrrrr பூஸ் மிய்யா மீயா மியாவ்.... இப்பூடித்தான் கத்தும்....

    கமெராவுக்கு உயிர் வந்துவிட்டதோ?:).

    மாணவர்களோடு பழகினாலே பொழுதுபோவதே தெரியாதே. தொடர்ந்து எழுதுங்கோ.

    ReplyDelete
  2. ஏன் இப்பதிவும் மேலே வரவில்லை?? காத்துப்போட்டுதோஓஓஓஓஓஓஒ?

    ReplyDelete
  3. Super! I like the end part very much. Kids are always fun to bewith.

    ReplyDelete
  4. // பாடசாலை முடிந்து வெளியேறும் சமயம் பத்திரமாக அந்தப் பென்சில் ஹோல்டரை ஓர் பையில் போட்டுக் கொண்டு பெருமையாக ஓர் நடை நடந்து போனார், அது இன்னும் என் கண்களில் நிற்கிறது// ஒரு பொருளை நாமே செய்வதில் இருக்கும் சந்தோஷமே தனிதான்...

    ReplyDelete
  5. ரொம்பவே ரசித்தேன் இமா.. தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியரை அவ்வப்பொழுது எழுப்பி, குச்சி பசை வாங்கி, சற்று வித்தியாசமாக செய்து முடித்து, அதையும் தன்னகப்படுத்திக் கொண்டு விடை பெற்ற அந்தக் குட்டி மாணவருக்கு முன்னமே சொக்லேட் தராதமைக்கு என்னுடைய கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. :))

    பென்சில் பாக்ஸ் அருமை. நானும் எப்போதாவது செய்யப் போகிறேன்..

    ReplyDelete
  6. ஆமை வடையா ஹைஷ்!! ;)

    ~~~~~~~~~~

    1.//பூஸ்// முன்னால 'கிக் கிக் கீ' என்றுதான் கத்தினது. இப்ப குரல் மாறிப் போச்சுதாம் அதிரா.
    2. இது சேமிப்பில் இருந்தது. :)
    3.//தொடர்ந்து எழுதுங்கோ.// வலைப்பூ என்றால் யாரையாவது தொடரத்தானே வேணும். ;)
    4.எனக்குப் பல காலமாகவே 'மேலே' வருவது பிந்திக் கொண்டு இருக்கிறது. நான் கண்டு அந்தந்த இடத்துக்கு விசிட் பண்ணேக்க கடை மூடிக் கட்டிக் கொண்டு இருப்பினம். ;) 'சமீபத்திய பின்னூட்டம்' கூட இதே கதைதான். ஒண்டும் செய்ய முடியேல்ல.

    ~~~~~~~~~~

    ஆம் இலா. ;) அவர்களோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிக்கலாம்.

    ~~~~~~~~~~

    மேனகா, நலமா? //ஒரு பொருளை நாமே செய்வதில் இருக்கும் சந்தோஷமே தனிதான்.// அதிலும் இது விசேடம். எப்படி என்பதை அடுத்த இடுகையிற் சொல்கிறேன். ;))

    ~~~~~~~~~~

    எல்ஸ்,
    1.//தூங்கிக் கொண்டிருந்த ஆசிரியரை// குழப்படிப் பிள்ளையாக இருக்கிறீங்கள்.சரணைப் போல அத்தை. ;)
    2.//குட்டி மாணவருக்கு முன்னமே சொக்லேட் தராதமைக்கு// காரணம் இருக்கிறதே. ;)
    3.செய்து பாருங்க சந்தனா. இது போல இணையத்தில் விதம் விதமாகக் கண்டு இருக்கிறேன். பென்சில் வைப்பதற்கு அடித்தட்டில் இடைவெளி இல்லாமல் குச்சி ஒட்டினால் நல்லது. வுட் க்ளூ / PVA க்ளூ பயன்படுத்தினால் பலகாலம் அப்படியே இருக்கும்.

    ReplyDelete
  7. சந்தனா, மேலே மேலும் இரண்டு படங்கள் இணைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. பென்சில் ஹோல்டர் ரொம்ப அழகா இருக்கு

    ReplyDelete
  9. சூப்பர்ப்...உண்மை தானே ...குழந்தைகள் என்று இல்லாமால் பெரியவர்களும் தங்கள் கைபட செய்த ஒரு பொருளையும் பிரியவிரும்புவதில்லை....அதனை பெரிய பொருளாக அந்த நேரம் கருதுவது....இதே போல பாக்ஸினை நானும் அக்ஷ்தாகுட்டியும் அடிக்கடி செய்வதுண்டு. ...எங்கள் neighboursக்கு எல்லாம் அக்ஷ்தா இதனை செய்தால் கொடுப்பாள்.....நன்றி...

    ReplyDelete
  10. இமா... அப்போ கிளிப்பூனை:),
    முன்பு
    கீயா... கீயா...
    இப்போ
    மீயா.... மீயா...
    இனி...
    ஆ... மை(..)யா? மையா??:))).

    //வலைப்பூ என்றால் யாரையாவது தொடரத்தானே வேணும். ;)// நோப்:), ”யாரையாவது” தப்பு..., மீயாவை ஓக்கை....

    உங்களுக்கு ஒரு புகை(யில்லாத) படக்கருவி அனுப்பியிருக்கிறேன்.... கிடைத்ததும் சொல்லிடுங்கோ ஓக்கை:).

    ReplyDelete
  11. Nice one. Those sticks remind me of some lame stuff we did in our first year.We had to make a miniature of a Y-Jack for our project, so we thought of using those ice-cream sticks. You know what we did. We bought lots of ice-creams and used those sticks. We were eating ice-creams day and night for almost a week and the excuse was, we needed some ice-cream sticks for our project. We could not checked some shops. But we could be bothered. He he.

    ReplyDelete
  12. We could have checked*

    ReplyDelete
  13. We had to wash those sticks, dry them and then had to paint as the colour changed. That was an awfully funny experience.

    ReplyDelete
  14. அனாமிகாவுக்கு ஐஸ்க்றீம் சாப்பிட ஒரு சாட்டு வேண்டி இருந்தது. அதனால்தான் தேடிப் பார்க்க இல்ல, என்ன? ;))

    ~~~~~~~~~~

    இன்னும் கிடைக்கேல்ல அதீஸ்.

    ReplyDelete
  15. கடைசிப்படம் கலக்கல். குட்டிப் பயல் விவரமான பொடியன் தான். நல்லா இருக்கு, இம்ஸ்.

    ReplyDelete
  16. படங்களுக்கும் தகவலுக்கும் ரொம்ப நன்றி இமா..

    தூங்குவதாகச் சொன்னது, குறும்புக்கு இமா.. (சரணைப் போலவே அத்தை :) )

    ReplyDelete
  17. நன்றி எல்எஸ்.

    அஷதா கையால் எனக்கும் ஒன்று கீதா. ;)

    இன்னும் கிடைக்கேல்ல அதீஸ். ;(

    ReplyDelete
  18. வாணி,
    //குட்டிப் பயல் விவரமான பொடியன் தான்.// ம். ;) பொல்லாத ஆள் அவர். ;)

    ReplyDelete
  19. ம். சரி. ;)
    இன்றைக்கு இந்த இடுகைக்கு உங்களுக்குத் தான் வடை. ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா