Tuesday 20 July 2010

இன்று வந்ததோர் மின்னஞ்சலில்

//அன்பு இமா... உங்க ப்ளாக்கில் சில நாட்களாக பதிவிடாமல் இருந்த காரணம் தெரியுமா??? உங்களுக்கு ஏற்ற ஒரு விருதோடு வரத்தான். இப்போ பிடிச்சுட்டேன்.... இது உங்க ப்ளாகுக்கும், உங்களுக்கும். :) உங்கள் படங்களில் நான் பட்டாம்பூச்சிகளை காணவில்லை... உங்கள் பாசத்தையே காண்கிறேன். உங்க புகைப்படம் ஒவ்வோன்றும் 1000 கதை சொல்லும்... அத்தனை அழகு.... அதை நான் ரசிக்கிறேன் என்பதை உங்களிடம் சொல்லவே இந்த விருது!!!
உங்கள் அன்பு,
--------- //
என்று இருந்தது.

 நமக்கெல்லாம் இந்த மாதிரி யோசனை எதுவும் தோன்றவே தோன்றாது. மிக்க நன்றி சகோதரி. ;)
~~~~~~~~~~~~~~~~
இதே சகோதரி முன்னர் 30 மார்ச் அன்றும் ஒரு மெய்ல் அனுப்பி இருந்தார். அதில் 
//இது என் அன்பு பரிசு... உங்களுடைய திறமைகள் மென்மேலும் வளர, வெளி உலகுக்கு ப்ளாக் மூலம் இமா தெரியவர எனது வாழ்த்துக்கள். உங்க ப்ளாக் இன்னும் இன்னும் சிறப்பா வளரனும்ணு இறைவனை பிராத்திக்கிறேன்.
அப்படியே கிரௌன் ஐ தலைல வெச்சு ஒரு போட்டோ அனுப்பிடுங்கோ.... ;) // என்று எழுதி இந்தக் கிரீடத்தையும் அனுப்பி இருந்தார்.
 அப்போதே அவர்கள் வேண்டுகோள் நிறைவேற்றப் பட்டு விட்டது. கரும்பு தின்ன இமாவுக்குக் கசக்குமா என்ன! ;) 
எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை, அதனால் இப்படி. ;)))

32 comments:

  1. இமா,
    விருதுகள் பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Thanks Mum. ;)

    ஹையா!! இந்த முறை செபாம்மாவுக்குத் தான் வடையா!! ;)

    ReplyDelete
  3. விருதுபெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.விருது கொடுத்த‌ நேயருக்கும் நன்றி.

    /மன்னிக்கவும்/

    ReplyDelete
  4. அது சரி இமா மாமி உங்களுக்கு மெயில் அட்ரஸ் எல்லாம் இருக்கா .ச்சே..தெரியாம போச்சே....!!!

    ReplyDelete
  5. விருதுக்கு வாழ்த்துக்கள..இன்னும் நிறைய கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  6. விருதுக்கு வாழ்த்துக்கள. இன்னும் நிறைய கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. ம்ம்ம் விருது விருது விருது.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அழகா இருக்கு இமா உங்கட கிரீடம்..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வாழ்த்தியமைக்கு நன்றி ப்ரியா, ஜெய், ஹைஷ், ரியாஸ், மேனகா & இலா. ;)

    ReplyDelete
  10. விருதுக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் இமா.

    ReplyDelete
  11. ப்ரியாவுக்கு ஒரு ;). பரவாயில்லை.

    சந்தேகப் பிராணி ஜெய்லானிக்கு ஒரு பெரிய கடுகு - http://www.arusuvai.com/tamil/node/13219 ;))

    ரியாஸ், உங்கள் வலைப்பூவை இப்போ அவசரமாக எட்டிப் பார்த்துவிட்டு வந்தேன். கண்ணிற் கவிதை மழைகள் பட்டன. ;) மெதுவாக மீண்டும் வருகிறேன். வருகைக்கு நன்றி. ;)

    மிக்க நன்றி அதிராத அதிரா. ;)

    எனக்கும் அதன் அமைப்புப் பிடித்து இருந்தது இலா.

    நன்றி எல்ஸ்... ;)) மருதாணி! மருதாணி!

    ReplyDelete
  12. விருதுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. Namaku oru viruduthu kudukka matrangapa...
    :((((.

    evlo kastapattu padikrom..sorry istapatu padikirom...

    m.m...nadakatum...
    "ungalku Docter Pattam Valanga Korikai vidukiren"

    ReplyDelete
  14. //சந்தேகப் பிராணி ஜெய்லானிக்கு ஒரு பெரிய கடுகு - http://www.arusuvai.com/tamil/node/13219 ;))//

    கடுகு சூப்பருங்கோவ்..!! சந்தேகமும் அங்கே கேட்டாச்சுங்கோவ்.....!! ரொம்ப நன்றிங்கோவ்..!!



    கடைசி வரை மெயில் அட்ரசுக்கு பதில சொல்லலியே..ஹி.ஹி..

    ReplyDelete
  15. வாழ்த்துக்கு என் அன்பு நன்றிகள் வாணி. ;)

    சிவா, அது ஏற்கனவே இரண்டு பேர் கொடுத்தாச்சு. ஆனால் காற்றில் பறந்து விட்டது. ;))

    //கடைசி வரை// சந்தேகக் கமன்ட் போடக் கடுகு கொடுத்ததாக எண்ணிக் கொண்டிருக்கும் ஜெய்லானி வாழ்க வாழ்கவே. ;)))
    ஒரு போஸ்டிங் படிச்சா இப்படியா சட்டென்று கமண்ட் போட்டுட்டு ஓடிருறது!! கண்ணில விளக்கெண்ணெய் விட்டுப் பார்க்கும் / படிக்கும் ஜெய்லானி எங்கே!!! ;)

    ReplyDelete
  16. //நமக்கெல்லாம் இந்த மாதிரி யோசனை எதுவும் தோன்றவே தோன்றாது//
    இப்படி எல்லாம் எழுதப்படாது.கர் கர் கர் கர்..

    //என் உலகத்துக்கு கிடைத்த விருதுகள்// என்பதற்கு அர்த்தமில்லாம‌ல் போய்விட்டதே.
    கவிசிவா,ஜலீகாக்கா,விஜி,ஜெய்லானி,ஸாதிகாக்கா,மனோக்கா,இர்ஸத் இவங்களெல்லாம் கோபிக்கப்போறாங்க. பார்த்து கவனம்.
    ஏதோ என்னால முடிந்தது..... எஸ்கேப்..........

    ReplyDelete
  17. பூஸ்க்குட்டி போல ஒரு முகத்தை வைத்துக் கொண்டு கர் சொல்லப் படாது. பொருத்தமாக இல்லை. ;))

    //நமக்கெல்லாம்// என்றால் (நான்) தன்மை (மரியாதைப் பன்மை) ;)
    முன்னிலையாக இருக்குமோ, படர்க்கையில் எழுதி இருப்பாங்களோ என்று யோசிக்கிற மாதிரி ரசிகப் பெருமக்களைத் தூண்டி விடப்படாது ப்ரியா.

    ஒரு நிமிடம் கண்ணை மூடி.... 'சரஸ்வதி சபதத்தில' வாற நாரதராக உங்களைக் கற்பனை செய்து பார்த்தேன். உச்சிக் குடுமியோட... முகில் நடுவே... கிக் கிக் ;)))))))))))))) தாங்க முடியேல்ல எனக்கு. அதீஸ் டிஷ்யூ ப்ளீஸ். ;)))))))

    ReplyDelete
  18. இமா... பூக்களும் கூட உங்க அன்புக்கு தலைவணங்குவது போல் இருக்கு :) அப்படி இருக்க... கொடுத்தவர் மட்டும் விதிவிலக்கா? - வனிதா

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் இமா!

    ReplyDelete
  20. புரிந்தது இமா.. அவங்களுக்கு ஏதும் ப்ளாக் இருக்கா?

    ReplyDelete
  21. வனிதா!!!!!!!!!!!!!!
    (அவ்வளவுதான். ;) வேற ஒண்டும் சொல்லத் தெரியேல்ல. தங்கள் பின்னூட்டம் கண்டு வாய் மூடி மௌனியாகினேன்.)

    //வாழ்த்துக்கள் இமா!// மட்டும்தானா மகி. ஒரு 'பண்' அனுப்பி இருக்கலாம். ;)

    //அவங்களுக்கு ஏதும் ப்ளாக்// இல்லை சந்தனா. இதைப் பார்த்து விட்டாவது ஆரம்பிப்பார்களா பார்ப்போம்.

    ReplyDelete
  22. ஹாய் இமா!
    இன்றுதான் இஙுவந்தேன் உங்கள் கிரீடம் மிக அழகு

    ReplyDelete
  23. முதல் வருகைக்கு நன்றி பிங்கிரோஸ். நல்வரவு.
    பிங்கி, ரோஸி என்னும் இரண்டு பெயர்கள் கொண்ட ஒருவர் எங்கள் ஊரில் இருந்தார். ;)

    கிரீடம்.. அந்தப் பாராட்டு கொடுத்தவரையே போய்ச் சேரும். ;)

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் இமா!

    ReplyDelete
  25. நல்வரவு & வாழ்த்துக்கு நன்றி கார்த்திக். ;)

    ReplyDelete
  26. இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. மிக்க நன்றி எல்எஸ். ;)

    ReplyDelete
  28. //ஒரு போஸ்டிங் படிச்சா இப்படியா சட்டென்று கமண்ட் போட்டுட்டு ஓடிருறது!! கண்ணில விளக்கெண்ணெய் விட்டுப் பார்க்கும் / படிக்கும் ஜெய்லானி எங்கே!!! ;) //

    ..ச்சே..இந்த அளவுக்கு நா எப்பவும் குழம்பியது இல்லையே..ஏறகனவே இதேமாதிரி க்ரவுன் குடுத்து அதை தலையில மாட்டியாச்சி . பின்ன யாரு அதேமாதிரி ஒன்னு குடுத்து தலையில மாட்ட சொன்னது.. அதே ஆளா..? இல்ல , போட்டோ கிராஃபிய ரசிச்சி பாராட்டகூடிய ஒரே ஆள் ????? அதுவும் பழைய கிரவுன் குடுத்த பார்ட்டிதான் . அப்ப ரெண்டும் ரெண்டும் மூனுதான் வருதே..!!ஒன்னு வரலையே..?

    ReplyDelete
  29. ////அவங்களுக்கு ஏதும் ப்ளாக்// இல்லை சந்தனா. இதைப் பார்த்து விட்டாவது ஆரம்பிப்பார்களா பார்ப்போம். //

    யாரங்கே..!! யாரடா அங்கே..!!ம்...முடியல ...அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  30. எத்தனை கமண்ட்ஸ் கொடுத்தலென்ன? இன்னமும் //கண்ணில விளக்கெண்ணெய் விட்டுப் பார்க்கும் / படிக்கும் ஜெய்லானி எங்கே!!!// ;)))))))))
    ஒரு பூசணிக்காய் பார்த்தா இப்படியா சட்டென்று கமண்ட் போட்டுட்டு ஓடிருறது!!

    //..ச்சே..இந்த அளவுக்கு நா எப்பவும் குழம்பியது இல்லையே..// ஆஹா!! முன்னாலயும் குழப்பி இருக்கிறோம்.. செபாம்மாவும் நானும் சேர்ந்து. ;)) அப்பவும் விளக்கெண்ணெய் தீர்ந்து போச். இப்பவும் தீர்ந்து போச்.
    அது போக.. ஜெய்லானி 'குழம்புறதே இல்லை' என்பதுதான் உலகப் பிரசித்தமான உண்மையாச்சே. டைகருக்குக் கூடத் தெரியுமே அது. ;)) (எதற்கும் சொல்லி வைப்போம். இங்கயே குழம்பிட்டு விட்டுருங்க. 'டீவீல' கேட்டு வைக்காதீங்கோ.)
    //அப்ப ரெண்டும் ரெண்டும் மூனுதான் வருதே..!!ஒன்னு வரலையே..? // கிக் கிக் ;)
    //ம்...முடியல ...அவ்வ்வ்வ்வ்// கிக் கிக் கிக் ;)
    முதல்ல ஒழுங்கா.. வரிசையா.. டீவீ கமண்ட்ஸுக்குப் பதில் போட்டு முடிச்சிட்டு... ஆறுதலா ஒரு வெள்ளிக்கிழமை உட்கார்ந்து ஆராய்ச்சி பண்ணுங்க. எல்லாமே புரியும்.

    நன்றி. வணக்கம். _()_

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா